இன்பத்துப்பால் · கற்பியல்
128. குறிப்பறிவுறுத்தல்
குறள் 1271–1280
- குறள் 1271கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.
- குறள் 1272கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்ணிறைந்த நீர்மை பெரிது.
- குறள் 1273மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன் றுண்டு.
- குறள் 1274முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
- குறள் 1275செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.
- குறள் 1276பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.
- குறள் 1277தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.
- குறள் 1278நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து.
- குறள் 1279தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கிஅஃதான் டவள்செய் தது.
- குறள் 1280பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.