இன்பத்துப்பால் · கற்பியல்

129. புணர்ச்சி விதும்பல்

குறள் 12811290
  1. குறள் 1281
    உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
  2. குறள் 1282
    தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின்.
  3. குறள் 1283
    பேணாது பெட்டவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்.
  4. குறள் 1284
    ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதென் நெஞ்சு.
  5. குறள் 1285
    எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து.
  6. குறள் 1286
    காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.
  7. குறள் 1287
    உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து.
  8. குறள் 1288
    இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு.
  9. குறள் 1289
    மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்.
  10. குறள் 1290
    கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.