இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்

குறள் 1288புணர்ச்சி விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

என்னுள்ளம் கவர்ந்த கள்வனே! இழிவு தரக்கூடிய துன்பத்தை நீ எனக்கு அளித்தாலும்கூட, கள்ளை உண்டு களித்தவர்க்கு மேலும் மேலும் அந்தக் கள்ளின் மீது விருப்பம் ஏற்படுவது போலவே என்னையும் மயங்கச் செய்கிறது உன் மார்பு.

மூலம் · அச்சுப் பக்கம் 262 · ஸ்கேன் 295 · மூலமும் சான்றும்