இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்

குறள் 1289புணர்ச்சி விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்செவ்வி தலைப்படு வார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 262 · ஸ்கேன் 295 · மூலமும் சான்றும்