இன்பத்துப்பால் · கற்பியல்

130. நெஞ்சொடு புலத்தல்

குறள் 12911300
  1. குறள் 1291
    அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீயெமக் காகா தது.
  2. குறள் 1292
    உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
  3. குறள் 1293
    கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீபெட்டாங் கவர்பின் செலல்.
  4. குறள் 1294
    இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று.
  5. குறள் 1295
    பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
  6. குறள் 1296
    தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.
  7. குறள் 1297
    நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டு.
  8. குறள் 1298
    எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
  9. குறள் 1299
    துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.
  10. குறள் 1300
    தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி.