குறள் 1293 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீபெட்டாங் கவர்பின் செலல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெஞ்சே! நீ என்னை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?
மூலம் · அச்சுப் பக்கம் 263 · ஸ்கேன் 296 · மூலமும் சான்றும்