குறள் 1299 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?
மூலம் · அச்சுப் பக்கம் 264 · ஸ்கேன் 297 · மூலமும் சான்றும்