இன்பத்துப்பால் · கற்பியல் · நெஞ்சொடு புலத்தல்

குறள் 1298நெஞ்சொடு புலத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 264 · ஸ்கேன் 297 · மூலமும் சான்றும்