குறள் 1297 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்மாணா மடநெஞ்சிற் பட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்து விட்டேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 264 · ஸ்கேன் 297 · மூலமும் சான்றும்