இன்பத்துப்பால் · கற்பியல்
131. புலவி
குறள் 1301–1310
- குறள் 1301புல்லா திராஅப் புலத்தை அவருறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.
- குறள் 1302உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்.
- குறள் 1303அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.
- குறள் 1304ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.
- குறள் 1305நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணார் அகத்து.
- குறள் 1306துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று.
- குறள் 1307ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்று.
- குறள் 1308நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்காதலர் இல்லா வழி.
- குறள் 1309நீரும் நிழல திணிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது.
- குறள் 1310ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்கூடுவேம் என்ப தவா.