இன்பத்துப்பால் · கற்பியல்
132. புலவி நுணுக்கம்
குறள் 1311–1320
- குறள் 1311பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்நண்ணேன் பரத்தநின் மார்பு.
- குறள் 1312ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ்க என்பாக் கறிந்து.
- குறள் 1313கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.
- குறள் 1314யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.
- குறள் 1315இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.
- குறள் 1316உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.
- குறள் 1317வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.
- குறள் 1318தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்எம்மை மறைத்திரோ என்று.
- குறள் 1319தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று.
- குறள் 1320நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்யாருள்ளி நோக்கினீர் என்று.