குறள் 1313 — புலவி நுணுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 267 · ஸ்கேன் 300 · மூலமும் சான்றும்