குறள் 1314 — புலவி நுணுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
“யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்” என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு “யாரைக் காட்டிலும் யாரைக் காட்டிலும்” எனக்கேட்டு ஊடல் புரியத் தொடங்கிவிட்டாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 267 · ஸ்கேன் 300 · மூலமும் சான்றும்