இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி நுணுக்கம்

குறள் 1315புலவி நுணுக்கம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

“இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்” என்று நான் சொன்னவுடன் “அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?” எனக் கேட்டுக் கண்கலங்கினாள் காதலி.

மூலம் · அச்சுப் பக்கம் 267 · ஸ்கேன் 300 · மூலமும் சான்றும்