குறள் 1316 — புலவி நுணுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
“உன்னை நினைத்தேன்” என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; “அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?” எனக்கேட்டு “ஏன் மறந்தீர்?” என்று அவள் ஊடல் கொண்டாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 268 · ஸ்கேன் 301 · மூலமும் சான்றும்