குறள் 1317 — புலவி நுணுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள். உடனே என்ன சந்தேகமோ “யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்” என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 268 · ஸ்கேன் 301 · மூலமும் சான்றும்