குறள் 1318 — புலவி நுணுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்எம்மை மறைத்திரோ என்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் “ஓ உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?” எனக் கேட்டு அழுதாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 268 · ஸ்கேன் 301 · மூலமும் சான்றும்