குறள் 1319 — புலவி நுணுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் “ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?” என்று சினந்தெழுவாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 268 · ஸ்கேன் 301 · மூலமும் சான்றும்