இன்பத்துப்பால் · கற்பியல் · புலவி நுணுக்கம்

குறள் 1320புலவி நுணுக்கம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்யாருள்ளி நோக்கினீர் என்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.

மூலம் · அச்சுப் பக்கம் 268 · ஸ்கேன் 301 · மூலமும் சான்றும்