இன்பத்துப்பால் · கற்பியல்

133. ஊடலுவகை

குறள் 13211330
  1. குறள் 1321
    இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்வல்ல தவரளிக்கும் ஆறு.
  2. குறள் 1322
    ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.
  3. குறள் 1323
    புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து.
  4. குறள் 1324
    புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை.
  5. குறள் 1325
    தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து.
  6. குறள் 1326
    உணலினும் உண்ட தறலினிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.
  7. குறள் 1327
    ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.
  8. குறள் 1328
    ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.
  9. குறள் 1329
    ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.
  10. குறள் 1330
    ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.