குறள் 1330 — ஊடலுவகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.
மூலம் · அச்சுப் பக்கம் 270 · ஸ்கேன் 303 · மூலமும் சான்றும்