குறள் 1329 — ஊடலுவகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.
மூலம் · அச்சுப் பக்கம் 270 · ஸ்கேன் 303 · மூலமும் சான்றும்