குறள் 1323 — ஊடலுவகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதைவிடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?
மூலம் · அச்சுப் பக்கம் 269 · ஸ்கேன் 302 · மூலமும் சான்றும்