இன்பத்துப்பால் · கற்பியல் · ஊடலுவகை

குறள் 1327ஊடலுவகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும்போது உணரப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 270 · ஸ்கேன் 303 · மூலமும் சான்றும்