குறள் 1306 — புலவி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 266 · ஸ்கேன் 299 · மூலமும் சான்றும்