குறள் 1295 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரி வஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர்கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.
மூலம் · அச்சுப் பக்கம் 263 · ஸ்கேன் 296 · மூலமும் சான்றும்