குறள் 1291 — நெஞ்சொடு புலத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீயெமக் காகா தது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?
மூலம் · அச்சுப் பக்கம் 263 · ஸ்கேன் 296 · மூலமும் சான்றும்