இன்பத்துப்பால் · கற்பியல் · புணர்ச்சி விதும்பல்

குறள் 1285புணர்ச்சி விதும்பல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும், கோலைக் காணாது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.

மூலம் · அச்சுப் பக்கம் 261 · ஸ்கேன் 294 · மூலமும் சான்றும்