குறள் 1271 — குறிப்பறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.
மூலம் · அச்சுப் பக்கம் 259 · ஸ்கேன் 292 · மூலமும் சான்றும்