குறள் 1270 — அவர்வயின் விதும்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்உள்ளம் உடைந்துக்கக் கால்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போய்விடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?
மூலம் · அச்சுப் பக்கம் 258 · ஸ்கேன் 291 · மூலமும் சான்றும்