குறள் 1272 — குறிப்பறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்ணிறைந்த நீர்மை பெரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கண்ணிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 259 · ஸ்கேன் 292 · மூலமும் சான்றும்