இன்பத்துப்பால் · கற்பியல் · குறிப்பறிவுறுத்தல்

குறள் 1273குறிப்பறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன் றுண்டு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

மூலம் · அச்சுப் பக்கம் 259 · ஸ்கேன் 292 · மூலமும் சான்றும்