குறள் 1275 — குறிப்பறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 259 · ஸ்கேன் 292 · மூலமும் சான்றும்