இன்பத்துப்பால் · கற்பியல் · குறிப்பறிவுறுத்தல்

குறள் 1279குறிப்பறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கிஅஃதான் டவள்செய் தது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக்கூடிய மென்மையான தோளையும் நோக்கியவள் காதலனைத் தொடர்ந்து செல்லுகின்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினாள்.

மூலம் · அச்சுப் பக்கம் 260 · ஸ்கேன் 293 · மூலமும் சான்றும்