குறள் 1277 — குறிப்பறிவுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குளிர்ந்த நீர்த்துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!
மூலம் · அச்சுப் பக்கம் 260 · ஸ்கேன் 293 · மூலமும் சான்றும்