குறள் 1259 — நிறையழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்கலத்தல் உறுவது கண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துத்தான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.
மூலம் · அச்சுப் பக்கம் 256 · ஸ்கேன் 289 · மூலமும் சான்றும்