குறள் 1251 — நிறையழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மன அடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்துவிடுகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 255 · ஸ்கேன் 288 · மூலமும் சான்றும்