குறள் 1250 — நெஞ்சொடு கிளத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமாஇன்னும் இழத்தும் கவின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது.
மூலம் · அச்சுப் பக்கம் 254 · ஸ்கேன் 287 · மூலமும் சான்றும்