இன்பத்துப்பால் · கற்பியல் · நிறையழிதல்

குறள் 1255நிறையழிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்உற்றார் அறிவதொன் றன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தம்மைப் பிரிந்து சென்ற காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து செல்லாத மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 255 · ஸ்கேன் 288 · மூலமும் சான்றும்