குறள் 1254 — நிறையழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்மறையிறந்து மன்று படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.
மூலம் · அச்சுப் பக்கம் 255 · ஸ்கேன் 288 · மூலமும் சான்றும்