குறள் 1241 — நெஞ்சொடு கிளத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கு மருந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?
மூலம் · அச்சுப் பக்கம் 253 · ஸ்கேன் 286 · மூலமும் சான்றும்