குறள் 1248 — நெஞ்சொடு கிளத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 254 · ஸ்கேன் 287 · மூலமும் சான்றும்