குறள் 1247 — நெஞ்சொடு கிளத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேனிவ் விரண்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டுவிடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 254 · ஸ்கேன் 287 · மூலமும் சான்றும்