குறள் 1239 — உறுப்புநலன் அழிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இறுகத் தழுவியிருந்தபோது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.
மூலம் · அச்சுப் பக்கம் 252 · ஸ்கேன் 285 · மூலமும் சான்றும்