இன்பத்துப்பால் · கற்பியல் · பொழுதுகண்டு இரங்கல்

குறள் 1223பொழுதுகண்டு இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்துன்பம் வளர வரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பக்கத்தில் என் காதலர் இருந்தபோது பயந்து, பசலை நிறத்துடன் வந்த மாலைப் பொழுது, இப்போது என் உயிரை வெறுக்குமளவுக்குத் துன்பத்தை மிகுதியாகக் கொண்டு வருகிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 249 · ஸ்கேன் 282 · மூலமும் சான்றும்