இன்பத்துப்பால் · கற்பியல் · பொழுதுகண்டு இரங்கல்

குறள் 1225பொழுதுகண்டு இரங்கல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மாலைப் பொழுதாகிவிட்டால் காதல் துன்பம் அதிகமாக வருத்துகிறது. அதனால் பிரிந்திருக்கும் காதலர் உள்ளம் “காலை நேரத்துக்கு நான் செய்த நன்மை என்ன? மாலை நேரத்துக்குச் செய்த தீமைதான் என்ன?” என்று புலம்புகிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 249 · ஸ்கேன் 282 · மூலமும் சான்றும்