குறள் 1226 — பொழுதுகண்டு இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைத் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 250 · ஸ்கேன் 283 · மூலமும் சான்றும்