குறள் 1228 — பொழுதுகண்டு இரங்கல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப் பொழுதை அறிவிக்கும் தூதாக வருவதுபோல் வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 250 · ஸ்கேன் 283 · மூலமும் சான்றும்