இன்பத்துப்பால் · கற்பியல் · கனவுநிலை உரைத்தல்

குறள் 1213கனவுநிலை உரைத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நனவினான் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நனவில் வந்து, அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 247 · ஸ்கேன் 280 · மூலமும் சான்றும்