குறள் 1216 — கனவுநிலை உரைத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற்காதலர் நீங்கலர் மன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நனவு மட்டும் திடீரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.
மூலம் · அச்சுப் பக்கம் 248 · ஸ்கேன் 281 · மூலமும் சான்றும்